2025 மே 13, செவ்வாய்க்கிழமை

65 இளம் சிறைக்கைதிகளுக்கு பயிற்சிப் பட்டறை

Gavitha   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள 65 இளம் சிறைக் கைதிகளுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) சிறைச்சாலையில் இடம்பெற்றது.

சிறைகளிலிருந்து வெளிவரும் கைதிகளை சமூகத்தில் அங்கிகரிக்கும் நோக்கோடும் தத்தமது துறைசார் தொழில் தகைமைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கோடு இந்த பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக, பிரதம சிறைக்காவல் அதிகாரி என். பிரபாகரன் தெரிவித்தார்.

பெரெண்டினா தொழில் நிலையத்தின் ஏற்பாட்டில், வந்தாறுமூலை தொழில் பயிற்சி நிலையத்தினால் நடத்தப்பட்ட இப்பட்டறையில்,  தகைமைகளுக்கேற்ப தொழிலொன்றைப் பெறுதல், குறித்த நபரின் தகைமையைக் கண்டறிந்து பயிற்சி வழங்குதல், வறுமைக் கோட்டின் கீழுள்ள இளைஞர் யுவதிகளுக்கு பண உதவி மற்றும் பயிற்சி, நேர்முக தேர்வுக்கு முகங்கொடுப்பதற்கு தயார் செய்தல் என்பவை குறித்து பயிற்றுவிக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X