Suganthini Ratnam / 2017 மார்ச் 28 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக இந்த வருடம் 4,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 1,700 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என கிராமிய பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்றபோது, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
அத்துடன், மத்திய மாகாண அமைச்சுகள் மற்றும் பல்வேறு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் ஊடாக மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .