2025 மே 09, வெள்ளிக்கிழமை

'உட்கட்டமைப்பு வசதிகளையும் படுவான்கரைப் பிரதேசம் இழந்துள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 08 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

படுவான்கரைப் பிரதேசமானது கடந்த முப்பது வருட  யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர்களை மாத்திரமன்றி கல்வி, கலை, பொருளாதார உட்கட்டமைப்புக்களையும் முழுமையாக இழந்த பிரதேசமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, படுவான்கரைப் பிரதேசமான திக்கோடை கிராமத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் திக்கோடைக் கிராமத்தின்  தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து  கேட்டறிந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது  மேலும் தெரிவித்த அவர், 'தற்போது நாட்டில் நல்லாட்சி நிலவுகின்ற சூழ்நிலையில் இப்பிரதேசம் இழந்துள்ள அனைத்தினையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. இப்பிரதேச வீதிகளின் அவலநிலை, பாடசாலைகள், மக்களின் குடியிருப்புக்கள், குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக நேரடியாக பார்த்திருக்கின்றேன். இது தொடர்பான அறிக்கையினை மிகவிரைவில் தயாரித்து சம்பந்தப்பட்ட அமைச்சுடன் கலந்துரையாடி துரிதகதியில் பல்வேறு வேலைத் திட்டங்களை படுவான்கரைப் பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ளோம்' என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X