2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'உடைமைகளை பாதுகாக்க முனைந்தவர்களே சுனாமியில் உயிரிழந்தனர்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 06 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சுனாமி அனர்த்தத்தின்போது தமது உடைமைகளை  பாதுகாக்க முனைந்தவர்களே அதிகளவில் உயிரிழந்ததாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி இணைப்பாளர் ஏ.சி.எம்.அல்தாப் தெரிவித்தார்.

சிலர் அனர்த்தங்களின்போது எச்சரிக்கையை  பொருட்படுத்தாமல் பொருட்களை பாதுகாப்பதில் ஈடுபடுவதனால் இழப்புகள் அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.

மழைக்காலமான டிசெம்பர் மாத காலப்பகுதியில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதுடன், இது தொடர்பில் 48 மணிநேரத்தில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

கரையோரப் பிரதேசங்களில் நேற்று வியாழக்கிழமை மாலை அனர்த்த ஒத்திகை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான ஒத்திகை கல்லடிப் பகுதியில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நடாத்தப்பட்டது.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவது, அனர்த்த எச்சரிக்கையின்போது எவ்வாறு நடந்துகொள்வது என்பது தொடர்பில் இங்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அனர்த்தத்தின்போது எச்சரிக்கைகளை ஏற்று எவ்வாறு செயற்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி இணைப்பாளர் ஏ.சி.எம்.அல்தாப் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.செல்வராசா, பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி வே.ஜீவிகா உட்பட சமுர்த்தி அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X