2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உணவு ஒவ்வாமையால் சுகவீனமுற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடிப் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர்ச் சுகவீனமுற்ற 56 பேர் சனிக்கிழமை (20) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள உணவுக் கடையொன்றில் சமைக்கப்பட்ட புரியாணியை வெள்ளிக்கிழமை (19) பகல் உட்கொண்டவர்களே திடீர்ச் சுகவீனமுற்றுள்ளனர்.

வயிற்றோட்டம், வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்றவை இவர்களுக்கு காணப்பட்டதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்; அடங்குவதாகவும் வைத்தியர் கூறினார்;.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற கூட்டத்தில், சுகவீனமுற்றவர்களுக்கு தேவையான சிகிச்சை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.  

இவ்வாறு உணவு ஒவ்வாமையால் சுகவீனமுற்றால் தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்லாமல், அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X