2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

3 உணவகங்கள் மூடல்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 18 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகரில் துப்புரவின்றி சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் காணப்பட்ட மூன்று உணவங்களை மூடியுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சிற்றுண்டிச்சாலைகளில் திடீர் பரிசோதனை நடிவடிக்கை இன்று (18.11.2016) கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது  துப்புரவின்றி காணப்பட்ட இம்மூன்று உணவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டு வாரங்களுக்குள் அந்த உணவகங்களில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளை சீர்படுத்திக் கொண்டு பொதுச் சுகாதர பரிசோதகர்களிடம் காண்பித்து அவர்களின் பரிசோதனையின் பின் மீண்டும் திறக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.


 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X