Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
புலம்பெயர் மக்கள் செய்யும் உதவிகளை இங்குள்ள மாணவர்களுக்கு வழங்கும்போது அவற்றினை உரிய நோக்கினை அடைவதற்காக பயன்படுத்தவேண்டும் என ஹரித்தாஸ் எகட் நிறுவகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜிரோன் டிலிமா தெரிவித்தார்.
மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஹரித்தாஸ் எகட் நிறுவகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜிரோன் டிலிமா,அதன் நிர்வாக முகாமையாளர் த.மனோகரன்,நிதிப்பொறுப்பாளர் பி.புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தரம் 8,9,10இல் கல்வி பயிலும் வறிய கோட்டுக்குட்பட்ட 400 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு மாதாந்தம் 1000ரூபாய் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதற்கான நிதியினை கனடாவினை தளமாக கொண்டு இயங்கும் லிபாரா அமைப்பு வழங்கியுள்ளது.
இதன் முதல் கட்டமாக இன்று 50பேருக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் மாணவர்கள், உயர்கல்வியை பூர்த்திசெய்யும் வரையிலும் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக பெரும் துன்பங்கள் மத்தியில் நாட்டை விட்டுச்சென்ற மூன்று பேர் இணைந்து இந்த லிபாரா என்னும் அமைப்பினை நடத்தி வருவதுடன் புலம்பெயர் மக்களுக்கு பல சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.
பல கஷ்டங்களுக்கு மத்தியில் மாணவர்களுக்கு புலம்பெயர் மக்கள் வழங்கி வரும் இவ்வாறான உதவிகளை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
அவர்கள் என்ன நோக்கத்துக்காக இந்த உதவிகளை செய்கின்றார்களோ அந்த நோக்கினை மாணவர்கள் அடையவேண்டும்.அதுவே உதவிசெய்யும் அவர்களுக்கு நாங்கள் செய்யும் கைமாறாகும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago