2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'உரிய தீர்வு கிடைக்குமென நம்புகின்றோம்'

Suganthini Ratnam   / 2017 மே 02 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

வேலைவாய்ப்புக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடித் தீர்க்கமான முடிவை அறிவிப்பார் என்று தாம் உறுதியாக நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், காந்தி பூங்காவுக்கு முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம்  இன்றுடன் 71ஆவது நாளை எட்டியுள்ளது.

தமது நியாயமான  கோரிக்கையை  உணர்ந்து, தங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தாம் போராட்டம் மேற்கொள்ளும் இடத்து வருகை தந்து, தமது பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் கேட்டறிந்துகொண்டுள்ளார். இந்நிலையில், அதற்குரிய நடவடிக்கையை அவர்  எடுப்பார் எனவும் வேலையற்ற பட்டதாரிகள் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X