Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 15 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
உள்நாட்டு விசாரணைக்குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லையென்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு தமக்கு உதவவேண்டுமெனவும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஏ.அமலநாயகி தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சனிக்கிழமை (14) விஜயம் செய்து, காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'எனது கணவர் 19.2.2009 அன்று மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்டமை தொடர்பில் பல இடங்களுக்கும் சென்று முறையிட்டேன். கணவரும் இதுவரையில் வீடு வரவில்லை. அவருக்கு என்ன நடந்ததெனவும் தெரியாது. இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து சாட்சியம் அளித்தேன். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை' என்றார்.
'எங்களுக்கு உள்நாட்டு விசாரணைக்குழுவில் நம்பிக்கை இல்லை. அவர்களினால் எந்தவொரு தீர்வும் எமக்கு கிடைக்காது. அவர்கள் எங்களை ஏமாற்றுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு விசாரணை செய்து எங்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும். எமக்கு நீதி, நியாயம் கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு உதவவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago