2025 மே 26, திங்கட்கிழமை

'உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மே 18 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 25 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் சபையின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இன்று நடைபெற்ற 'பெண்கள் வலுவூட்டல்' மாநாட்டிலேயே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'ஜனநாயக ஆளுமை, பொறுப்புக்கூறலை பலப்படுத்துதல்' எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த இட ஒதுக்கீட்டு  நடைமுறையானது எதிர்காலத்தில் மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குப் பெற்றுத்தரப்பட வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டுள்ளன.
பிரதியமைச்சர் அனோமா கமகே தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பலர்; கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X