2025 மே 14, புதன்கிழமை

'உள்ளக விசாரணையை தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள்'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

உள்ளக விசாரணையை ஏற்று தமிழ் தலைமைகள் அமெரிக்காவின் பின்னால் சென்றாலும், தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக்கழகம் 44ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ் மக்கள் என்றைக்கும் சர்வதேச விசாரணையை மட்டுமே கோரி நிற்கின்றனர். உள்ளக விசாரணையில் தமிழ் மக்களுக்கு என்றும் நம்பிக்கையில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, கிழக்கு பல்கலைக்கழக படுகொலை உட்பட பல படுகொலைகளுக்கு எங்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.

உள்ளக விசாரணையில்; தமிழ் மக்களுக்கு என்றும் நம்பிக்கையில்லை. உள்ளக விசாரணையினை ஏற்று தமிழ் தலைமைகள் அமெரிக்காவின் பின்னால் சென்றாலும் தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X