Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
எதிர்கால சந்ததியின் தேகாரோக்கியம் விவசாயிகளின் கைகளிலேயே உள்ளது என மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.
'இயற்கையுடன் விவசாயம், தீங்கற்ற எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (19) நடைபெற்ற விழிப்புணர்வு நடைபவனியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வாகரைப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆரம்பமான இந்த நடைபவனி, மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலையூடாக வம்மிவட்டவான் மைதானம் வரைச் சென்று விழிப்பூட்டல் கலை நிகழ்ச்சிகளுடன் முடிவுற்றது.
நடைபவனியின்போது நஞ்சற்ற உணவு உற்பத்தியை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதோடு அவை பயணிகளுக்கு விநியோகமும் செய்யப்பட்டன.
அங்கு தொடர்ந்து உரையற்றிய பிரதேச செயலாளர், 'விசாயிகள் சுயநலம் தவிர்த்து பொதுநோக்கம் கருதி எதிர்கால சமூகத்தின் தேக ஆரோக்கியத்தினைக் கருதிற்கொண்டு இரசாயன கிருமிநாசிகளைத் தவிர்த்து சேதனப் பசளைகளைப் பாவிக்க முயற்சிக்க வேண்டும்.
அதனூடாகவே நஞ்சற்ற விவசாய உற்பத்தியை மேற்கொள்ள முடியும். ஒரு சிறிய மட்டத்தில் தொடங்கும் விழிப்புணர்வு விவசாயப் பிரதேசமெங்கும் வியாபித்தால் ஒட்டு மொத்த சூழலும் நஞ்சற்றதாக மாறும்' என்றார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வேர்ல்ட் விசன் வாகரைத் திட்டம் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago