Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு, 'எதிர் நீச்சல்' மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில், புதிய நிர்வாக அங்கத்தவர் தேர்வு, மட்டக்களப்பு இந்து இளைஞர் கட்டத்தொகுதியின் கேட்போர் கூடத்தில், இன்று சனிக்கிழமை (20) நடைபெற்றது.
இந்நிகழ்வில், பழைய நிர்வாக அமைப்பினரே மீண்டும் நிர்வாகக் குழு அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்படி, தலைவராக கே. பிரபாகரன், உப தலைவராக எம். சிவானந்தன், செயலாளராக கே. அருணன் ஆகியோருடன் 24 பேரை அங்கத்தவர்களாகக் கொண்ட நிர்வாக சபையொன்று நியமிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், குடிநீர் வசதியற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்முனை வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிக் குடும்பங்களையும் கணக்கெடுப்புச் செய்து அவர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருதல், மாற்றுத்திறனாளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தகைமை பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தீர்மானம் எட்டபட்டது.
இந்நிகழ்வில், மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி, மாவட்டச் செயலக சமூக சேவை உத்தியோகத்தர் வி. செல்வநாயகம், மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர் பி. கலாதேவன், சமூக சேவைத் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ். கலைவாணி, பி.புஷ்பவேணி ஆகியோரும் இக்கூட்டத்துக்கு கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
8 hours ago
9 hours ago