2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'எமது நாட்டில் சுமூகமான அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

'தற்போது முழு உலகில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதுடன், குண்டுச் சத்தங்களும் கேட்டவண்ணம் உள்ளன. இதேவேளை, எமது நாட்டில் மிகவும் சுமூகமான அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது' என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்வை சித்தரிக்கும் 'கிழக்கு வாசல்' நூல் வெளியீட்டு விழா காத்ததன்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று (10) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'எல்லோரும் மனிதர்களே. அவர்களை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற பிரிவினையுடன்  ஒருபோதும் நோக்கக் கூடாது.

தற்போது இந்த நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தல்களில் மக்கள் மனச்சாட்சியுடன் வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

1948ஆம் ஆண்டில்  இலங்கைக்கான சுதந்திரத்தை தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் இணைந்தே பெற்றுக்கொடுத்தனர்.

இந்த நாடு எதிர்காலத்தில் சிங்கப்பூரைப் போலவும் டுபாயைப் போலவும் அபிவிருத்தியில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதற்காக அனைத்து மக்களும் ஒற்றுமைப்பட்டு உழைக்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .