Suganthini Ratnam / 2016 நவம்பர் 23 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டைப் பிரிப்பதுடன், நாட்டு மக்களை வேறுபடுத்துவதாகவும் இனவாதிகள் சிலர் கூறிக்கொள்கின்றனர். உண்மையில் எமது மக்களுக்கு உரிமையுள்ள அதிகாரத்தையே நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்' என கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை சமகால அரசியல் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'நாங்கள் பாதிக்கப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக இருந்து இந்த நாட்டின் ஏகாதிபத்திய ஆட்சி பீடங்களுக்கும் இனவாதிகளுக்கும் வடகிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் பேசும் மக்கள் ஒன்றுசேர்ந்து உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு பாடுபட வேண்டும்.
கடந்த காலத்தில் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுகளைப் பயன்படுத்தி எங்களுக்குள் இடைவெளிகளைக் கொண்டுவந்து அவர்கள் அவர்களது இலாபம் அடைந்தனர். இனவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு நம்பிக்கை ஊட்டுவதாகவுள்ளது. இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களுக்கு நல்ல செய்தியை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்' என்றார்.
'மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் சார்ந்த பகுதியில் சுனாமியைப் பற்றி உரையாடுவார்கள்;. சுனாமி ஏற்பட்டு 12 வருடங்கள் கடந்துவிட்டன. வயல் சார்ந்த பகுதிக்குச் சென்றால் யுத்தம் பற்றி உரையாடுவார்கள். யுத்தம் முடிந்து 07 வருடங்கள் கடந்து விட்டன. இவையெல்லாம் காலம் கடத்தும் செயற்பாடாகும். கல்வியில் பின்தங்கியிருந்த நாங்கள் முன்னேற ஆரம்பித்துள்ளோம்.
கிழக்கு மாகாணம் கல்வியில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அந்த நிலையில்; மட்டக்களப்பு மாவட்டம் கல்வி நிலையில் ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும், கல்வியில் படிப்படியாக முன்னேற வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025