2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'எழுக தமிழ் பேரெழுச்சியில் அரசியலில்லை'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 05 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

எழுக தமிழ் பேரணியானது, அரசியல் செய்வதற்காகச் செய்யவில்லை. இது மக்கள் எழுச்சிப் பேரணியாகும். இது அரசியல் செய்வதற்கான தளமல்ல. அரசியல் கட்சியோ அல்லது குறிப்பிட்ட நபர்களோ அரசியல் நடாத்துவதற்கான தளமோ அல்லது களமோ இது இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில், இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“எழுக தமிழ் பேரெழுச்சியானது, ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களும் தங்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கும் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கும் அழுத்தத்தை கொடுப்பதற்குச் செய்யப்படும் செயற்பாடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

"தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி அறவழிப் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைமை வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்டுள்ளது.

"கடந்த சில தினங்களுக்கு முன்பு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் வீதியோரங்களில் இருந்து நீர், ஆகரத்தைத் தவிர்த்து அறவழிப் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். பல தாய்மார் அந்த இடத்திலே மயங்கி விழுந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டார்கள்.

"2017ஆம் ஆண்டு மலர்ந்து தொடச்சியாக வன்னியிலே இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

"முல்லைத்தீவில்,  மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வீதியோரங்களில்  அறவழிப் போராட்டம் நடத்துகின்றனர்.

"நல்லாட்சியில் மக்கள் எதிர்ப்பார்த்த விடயங்கள் அரசியல் தீர்வு விடயம் அதற்கு முன்பு அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு இவ்வாறு பல்வேறு பட்ட நிலைமைகள் இன்னும் நடந்தேறவில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X