2025 மே 08, வியாழக்கிழமை

“எழுத்தறிவும் வாசிப்பும் புலமைச் சிறப்பாகும்”

Niroshini   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்  

'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' இறைவனுக்கு அடுத்த படியாக எழுத்தை பழக்குபவர் ஆசிரியர் ஆவார். எழுத்தறிவும் வாசிப்பும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இருக்க வேண்டிய புலமைச் சிறப்பாகும் என மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஜேஆர்.பி விமல்ராஜ் தெரிவித்தார்.

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு எழுத்தறிவும் உறுதிமிக்க சமுதாயம் எனும் தொனிப்பொருளில் இன்று வியாழக் கிழமை கார்ட்மன் மண்டபத்தில் நடைபெற்ற எழுத்தறிவு சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எழுத்தை அறிந்து கொள்ளும் போது நாம் எமது மதம், மொழி, கலை, கலாசார ஒழுக்க விழுமியங்களை அறிந்து கொள்ளலாம். முன்னைய காலத்தை விட நவீன காலத்தில் எழுத்தறிவு ஒவ்வொரு பிள்ளைக்கும் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருப்பதனால் தங்களின் எழுத்தறிவுத் தன்மையை வினைத்திறன் மிக்கதாக மாற்ற முடியும். இதனால் சமூகத்தில் எழுத்தறிவுப் பிரச்சினை, மொழிப் பிரச்சனை ஏற்படாது.

இதனால் எம்மிடையே எழுத்தறிவின் முக்கியத்துவம் தெளிவாக விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உருவாகும்.

எனவே, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊக்கப்படுத்தி எழுத்தறிவுள்ள,வாசிப்புள்ள புலமையாளர்களை உருவாக்க முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X