2025 மே 07, புதன்கிழமை

“எழுத்தறிவு வீதம் அதிகரிப்பதற்கு இலவசக் கல்வியே காரணம்”

Niroshini   / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கையில் எழுத்தறிவு வீதம் அதிகரிப்பதற்கு இலவசக் கல்வியே காரணமாகுமென காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாணவர்களுக்கு வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினால் இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சிசுதிரிய புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆசிய நாடுகளுக்குள் எழுத்தறிவு வீதத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. எழுத்தறிவு வீத்தில் ஜப்பானுக்கு அடுத்ததாக இலங்கை உள்ளது.

இதற்கு இலங்கையில் இலவசக் கல்வி வழங்கப்படுவதே காரணமாகும்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் வரை அரசாங்கம் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்கி மாணவர் கல்வியை ஊக்குவித்து வருகின்றது.

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் அரசாங்க உத்தியோகத்தரில்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவாக மாதமொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது.  

இதுபோன்று சமூக நிறுவனங்கள் , அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறான புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்கி மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கின்றன என்றார்.

இந்த வைபவத்தில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச தலைமையக முகாமையாளர் திருமதி எப்.ஆர்.பாத்து, முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.வாமதேவன், கலாசார அபிவிருத்தி உதவியாளர் மௌலவி எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ ,வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அன்சார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 28 மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு 500 ரூபாய் வீதம் ஒரு வருடத்திற்கான சிசுதிரிய புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X