Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'விட்டுக்கொடுக்கும், ஏனைய இனங்களை நேசிக்கும் மனப்பான்மை எங்களிடமும் இல்லை, எங்களின் தலைமைத்துவங்களிடமும் இருக்கவில்லை. இது கடந்தகால அனுபவத்தில் நாம் பெற்றுக்கொண்ட படிப்பினை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிவானந்தா மற்றும் கோட்டைமுனை விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு திங்கட்கிழமை (22) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், '1970 களில் பல்கலைக்கழகத் தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டு தமிழ், இளைஞர் யுவதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர். அடுத்தடுத்து வந்த பெரும்பான்மையினத் தலைமைகள் சிறுபான்மை மக்களை நேசிக்கத் தவறியதுடன,; அவர்களின் உரிமைகளையும் வழங்க மறுத்தனர்.
இதன் காரணமாக சாத்வீக வழியில் போராடிய தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆயுதப் போராட்டம் மூன்று தசாப்தமாக இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்தனர். இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக முடக்கப்பட்டுள்ளனர்.
விட்டுக்கொடுக்கும், ஏனைய இனங்களை நேசிக்கும் மனப்பான்மை எங்களிடமும் இல்லை, எங்களின் தலைமைத்துவங்களிடமும் இருக்கவில்லை. இது கடந்தகால அனுபவத்தில் நாம் பெற்றுக்கொண்ட படிப்பினை' என்றார்.
'2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு சிறந்த தீர்வுத்திட்டத்தை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறியுள்ளது. யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
சிறுபான்மை மக்கள் ஆட்சி மாற்றத்தை நோக்காகக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிபீடம் ஏற்றினர். நல்லாட்சி அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்திசெய்துள்ள நிலையில், தீர்வுத்திட்டம் தொடர்பான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு சிறந்த தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் வழங்கவேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் வட, கிழக்குப் பிரதேசத்தில் சிறந்த சமஷ்டிக் கட்டமைப்பை நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும். கடந்த காலத்தில் இழந்த உரிமைகளை நல்லாட்சியில் சிறுபான்மைச் சமூகம் அனுபவிக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகத்தின் நம்பிக்கையை இந்த அரசாங்கம் வீணடிக்கக்கூடாது' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago