2025 மே 07, புதன்கிழமை

'ஏறாவூர் பள்ளிவாசல்கள் பலியிடலில் ஈடுபடாது'

Niroshini   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இம்முறை உழ்ஹிய்யா எனும் கால்நடைகளை அறுத்துப் பலியிட்டு அவற்றைப் பகிர்ந்தளிப்பதில் ஈடுபடாது என சம்மேளனத்தின் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சம்மேளனக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

கடந்த ஆண்டு இந்த சம்மேளனத்துக்கு துருக்கியிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவன கொடையாளிகள் மாடுகளை அறுத்துப் பலியிட்டு அதன் மாமிசத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்வதற்காக சம்மேளனத்துக்கு பணம் அனுப்பினார்கள்.

அதனைக் கொண்டு உழ்ஹிய்யா எனும் அந்த மார்க்கக் கடமையை கடந்த ஆண்டு சம்மேளத்தின் மூலமாக நிறைவேற்றினோம்.

அதேபோன்று இம்முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளுக்கிணங்க,கால்நடைகளை அறுத்துப் பலியிடலுக்கு முற்பணமாக 10 இலட்சம் ரூபாவை  ஏறாவூர் பள்ளிவாசல்கள மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கு துருக்கி தன்னார்வத் தொண்டு நிறுவன கொடை வள்ளல் ஒருவர் அனுப்பியிருந்தார்.

ஆயினும், கால் நடைகளை அறுத்துப் பலியிடல் விவகாரங்களில் சம்மேளனம் ஈடுபடுவதில் சிக்கல்கள் இருப்பதால் அதனைத் தவிர்த்து கொள்வதென்றும் முற்பணமாக அனுப்பப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பணத்தை திருப்பி அனுப்புவதற்கும் சம்மேளனக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது என்றார்.

மேலும்,கடந்த வருடம் ஏறாவூரில் மாத்திரம் துருக்கி நாட்டுத் தொண்டர் நிறுவனத்தினூடாக சுமார் 60 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியில் 325 மாடுகள் ஏறாவூரில் அறுத்துப் பலியிட்டு அதன் மாமிசம் ஏழைகளுக்கு தர்மமாக வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X