Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்
'ஒற்றையாட்சி முறையால் நாம் பெற்றதெல்லாம் பேரினவாதமும் பிற்போக்கான கொள்கைகளுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒற்றையாட்சி முறைமை நாட்டுக்கும் எம்மக்களுக்கும் தந்தெல்லாம் தோல்விகளும் தொடர் தீமைகளுமே ஆகும். ஆளும் அதிகார வர்க்கம் உழைப்பதற்கும் பிழைப்பதற்கும் உகந்ததே ஒற்றையாட்சி முறைமையாகும்' என்றார்.
'எனவே, உலகில் வெற்றி பெற்ற சமஷ்டி முறைமையை அரசியல் சாசனத்தில் உள்வாங்க வேண்டும். சமஷ்டியின் மூலமாக சமத்துவங்கள் பெற்றிடவும் சகோதரத்துவம் தளைத்திடவும் இதயங்களைச் சேர்த்து சமஷ்டியால் வெற்றி பெற்ற சாதனை தடயங்களை ஏற்படுத்த வேண்டும்.
நாமெல்லாம் இலங்கையர் என்பதற்கு நல்லதோர் சூத்திரம் சஷ்டியேயாகும்' என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago