Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்.
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று வியாழக்கிழமை வீடுகள்,அரச திணைக்களங்கள்,பாடசாலைகள் மற்றும் பொதுக் கட்டடங்கள் என்பன பரிசோதனை செய்யப்பட்டதுடன் டெங்கு நுளம்பு பெருகும் நிலையில் இருந்த உரிமையாளர் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.
சுகாதர அமைச்சின் கீழ் இயங்கும் டெங்கு ஒளிப்பு பிரிவினால் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவு டெங்கு தீவிரப் பிரிவாக பிரகடனப்படுத்தப்பட்டு இந்த வாரத்தில் நான்கு நாட்கள் தங்களது பிரதேசத்திலுள்ள அனைத்து இடங்களையும் பரிசோதனை செய்யுமாறு பணிக்கப்பட்டதற்கிணங்க இந்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பார்வையிட்ட வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் பொருட்களை வைத்திருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் மீண்டும் அவர்கள் நுளம்பு பெருகக் கூடிய வகையில் தங்களது சுற்றுச் சூழலை வைத்திருப்பார்கள் என்றால் அவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago