2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஓட்டமாவடியில் ஹர்த்தால்

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ரீ.எம்.பாரிஸ்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை புதன்கிழமை ஓட்டமாவடியில் ஹர்த்தால் அனுஷ்டிப்பை மேற்கொள்ளவுள்ளதாக கல்குடா பிரதேச அபிவிருத்தி குழுக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவ் ஆய்வு கூடமானது  நாட்டின் தெரிவு செய்யப்பட்ட மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளில் சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில்,இதில் பூர்த்தி செய்யப்படாமல் இருத்த கட்டடங்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னர் 'விஞ்ஞான ஆய்வு' கூடமாக பெயர் மாற்றப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாகவே, இவ் ஆய்வு கூடத்தினை குறிந்த இரு பாடசாலைகளிலும் திறப்பதற்கான நடவடிக்கையினை கிழக்கு மாகாண கல்வி பணிமனை மேற்கொண்டுள்ளது.

இவ் ஆய்வு கூடங்களை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாமின் உத்தரவுக்கு அமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரை கொண்டு திறக்குமாறு வலயக்கல்வி பணிப்பாளர் ஊடக குறிந்த பாடசாலையின் அதிபர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளின் அபிவிருத்தி சங்கங்களும் இவ் ஆய்வு கூடங்களை முதலமைச்சரை கொண்டு திறப்பதற்கு விரும்பாத நிலையிலும் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பாடசாலை அதிபர்களினால் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவ் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும்,எமது பிரதேச அபிவிருத்தியில் எவ்வித பங்கும் வகிக்காத மாகாண முதலமைச்சர், ஏன் எமது பாடசாலை கட்டடத்தினை திறக்க வேண்டும்? யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? எனவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X