Suganthini Ratnam / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா,நல்லதம்பி நித்தியானந்தன்
தொல்பொருட்கள் என்ற போர்வையை மையமாகக் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு இடமளிக்க மாட்டோம்' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்கிழமை செங்கலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் 'வடக்கு, கிழக்கில் 325 விகாரைகளுக்கு தான் 100 மில்லியனை வழங்குவதாக, புத்தசாசன அமைச்சர் கூறியிருக்கின்றார். ஆனால் வடகிழக்கில் 325 விகாரைகள் இல்லை, இவைகள் அனைத்தும் திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் திட்டமிட்ட பௌத்த விகாரை மற்றும் மதச் செயற்பாடுகளுக்கு இந்து குருமார்கள் ஒன்றியமும் மக்கள் பிரநிதிகளாகிய நாங்களும் அனுமதிக்க முடியாது.
நாட்டில் பௌத்த மதத்துக்கு ஒரு சட்டம் இந்துமதத்துக்கு ஒரு சட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அண்மையில் வடமாகாண ஆளுனர் இலங்கை இந்து இந்துமதத்தினுடைய நாடு என கூறியிருக்கின்றார்.
கிழக்கு மாகாணத்தில் முன்பு இராணுவம் குடியிருந்த பகுதிகளில் சில தொல்பொருள்கள் மறைமுகமாக புதைக்கப்பட்டுள்ளன. அதன்நிமிர்த்தம் பன்குடாவெளியில் மதகுருவின் காணியிலும் புதைக்கப்பட்டிருந்தது. தமிழ் பிரதேசங்களில் இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளன.
தொல்பொருள் என்ற ரீதியில் வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழ் மக்களின் இடங்களை சுவீகரிக்க அரசாங்கம் ஒரு போதும் முற்படக்கூடாது' என்றார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025