Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
காணியற்றவர்களுக்கு வழங்கப்படும் காணிகளை விற்பனை செய்ய முற்பட்டால் அந்தக் காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் காணியற்றவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, பிரதேச வெருகல் செயலாளர் மா.தயாபரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதுவரைகாலமும் இருப்பதற்கு காணி இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 260 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், 'அரசாங்கம் வழங்கும் பெறுமதியான இக்காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதுடன், அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் பாதுகாக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் அல்லது இரத்த உறவுகளுக்;காக மட்டுமே இதன் உரிமை மாற்றப்பட முடியும். ஆனாலும் பலர் இவற்றை ஈடு வைப்பதற்கும் விற்பதற்கும் தயாராக இருப்பீர்கள். அவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றால் இக்காணிகள் மீண்டும் அரச உடைமையாக மாறிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. காணிகளில் கிடைப்பனவானது இப்பிரதேசத்தில் மிக அரிதாக இருப்பதனால் ,இவற்றை பாதுகாப்பாக பேணுவது உங்கள் பொறுப்பாகும். புனர்வாழ்வு அமைச்சின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற பல உதவித்திட்டங்கள் காணி உரிமை இன்மையால் கை நழுவிப் போயும் பலர் இங்கு இருக்கிறீர்கள். இனிமேல் அவ்வாறான சூழ்நிலையொன்று உங்களுக்கு ஏற்படாது' என்றார்.

15 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
35 minute ago