Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள அச்சநிலையை தளர்த்தும் வகையில் நல்லாட்சிக்கான அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக தமிழ் அரசியல் கைதிகளை நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்பு விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வித்தியாலய அதிபர் செபஸ்டியன் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கல்குடா வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ரி.ரவி, ஏறாவூர்ப்பற்று கோட்ட கல்வி அதிகாரி பொ.சிவகுரு, ஓய்வுபெற்ற அதிபர் வ.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
புதிய அரசாங்கம் இந்த நாட்டிலே சிறுபாண்மை மக்களுக்கு பிரச்சினை உள்ளது அதற்கான நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றது.
அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
இராணுவத்தினரால் சுவிகரிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள எமது மக்களின் காணிகள் பாடசாலைகள் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டு முகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
மேலும்,வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றப்படாதுள்ள பகுதிகளில் உடனடியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் போன்ற நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் போது எமது மக்கள் மத்தியில் நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் மீதுள்ள சந்தேகம் நீங்கும் வாய்ப்பு உருவாகும் என்றார்.
இங்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் உரையாற்றுகையில்,
நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் நம்மதியாகவம் வாழ வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவரும் நிலையில் இடையிடையே வரும் சலசலப்புக்களைக் கேட்டு மக்கள் குழப்படமையகூடாது.
இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக ஏனைய மாவட்டங்களை விட கல்வியில் சற்று பின்தங்கி காணப்டுகின்றோம். நாங்கள் எங்களுக்காக அல்ல எமது இனத்துக்காக என படிக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் விசாரணை வரமாட்டாது என்று கூறினார்கள். விசாரணை வந்த பின்பு சர்வதேச விசாரணையாக இருக்காது என்றார்கள். கலப்பு நீதி மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்ட போது சர்வதேச ஈடுபாடு இருக்காது என எம்மவர்கள் கூறிக்ககொண்டிருக்கிறார்கள் மற்றொரு பக்கம் சர்வதேச தலையீடு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த சமயத்திலேயே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago