2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'கைதிகளுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது'

Niroshini   / 2015 நவம்பர் 08 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்ய முடியுமானால், நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
பாடசாலை அதிபர் வயிரமுத்து நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
படுவான்கரைப் பிரதேசம் கல்வியிலும் வாழ்வாதாரத்திலும் மிக பின்தங்கி காணப்படுகிறது. இந்த பிரதேசங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என தற்போது ஆராய்ந்துகொண்டிருகிறோம்.
 
தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகத் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை வழங்குவதாக தொடர்ந்தும் ஏமாற்றிவந்த காரணத்தினால் சிறுபான்மை மக்கள் இணைந்து அவரை தோற்கடித்தார்கள்.
 
சிறுபான்மை மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தமிழ் மக்களுக்கு விசுவாசமாக செயற்பட வேண்டும்.

நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது அது தொடர்பாக பேசுவதற்கு எங்களால் முடியாது ஆனால் ஜனாதிபதியால் பொது மனிப்பு வழங்கக் கூடிய அதிகாரம் உண்டு.

அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X