2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக 60 பேர் அனுமதி

Suganthini Ratnam   / 2017 மார்ச் 09 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்குக் காய்ச்சலுக்கான அறிகுறி காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 60 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவ்வைத்தியசாலை அத்தியட்சகர், டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

இதன் காரணமாக வைத்தியசாலை விடுதிகள் நிரம்பிக் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.  

இது இவ்வாறிருக்க, கடந்த  டிசெம்பர் முதல் நேற்று (9) வரை 103 பேர் டெங்குக் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன்  ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுச் சென்றதாகவும் அவர் கூறினார்.

மேலும்,  இந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் தினமும் காய்ச்சல் காரணமாக சுமார் 100 பேர்  சிகிச்சைக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .