Niroshini / 2016 நவம்பர் 22 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்க்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக நன்றி கூறுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி ஒருங்கிணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் தெரிவித்தார்.
இன்று(22) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று இந்நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கின்றபோது முஸ்லிம்களை இலக்குவைத்து இனவாத அமைப்புக்களான பொதுபல சேன, சிங்கலே, இராவண பலே போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், வந்தேறுகுடிகள் எனவும் பிரசாரங்களையும் போராட்டங்களையும் முன்னெடுக்கும் இக்காலத்தில், நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த நீதி அமைச்சுப் பதவியில் இருந்து கொண்டு நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ, கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இலங்கை முஸ்லிம்களில் 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்றும், சில மத்ரஸாக்களை சுட்டிக்காட்டி மத்ரஸாக்களில் இன வாத சிந்தனைகள் போதிக்கப்படுவதாக கூறியிருந்தமை இலங்கை வாழ் முஸ்லிம்களை மிகவும் வேதனைப்படுத்திய உரையாகும்.
நான் உட்பட முஸ்லிம்கள் 100 சதவீதம் வாக்களித்து உருவாக்கிய இந்த நல்லாட்சி அரசாங்கத்தில், இவ்வாறான பேச்சுக்களும் இனவாத சிந்தனைகளை தூண்டும் அமைப்புக்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் தாமதமாவதைக் கண்டு முஸ்லிம் சமூகம் மிக அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.
இந்த நேரத்தில் பெரும்பான்மை மக்களின் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஊடகங்கள் மூலம் நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றேன். இலங்கை முஸ்லிம்களுக்கும் சர்வதேச தீவிரவாத அமைப்பான அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியிருந்தார்.
இவ்வாறான ஒரு கருத்தை கூறியிருந்தது முஸ்லிம் மக்களிடையே மிக உற்சாகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தி இருந்தது என்பதை மறுக்க முடியாது. இதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025