Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
புதிய காத்தான்குடி நதியா பீச் பகுதியில் திங்கட்கிழமை (05) இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகிலிருந்து 30 குதிரை வலுக் கொண்ட இயந்திரம் திருட்டுப் போயுள்ளது.
இதுபற்றிய முறைப்பாடொன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலுக்குச் சென்று வழமைபோன்று திங்கட்கிழமை மாலை குறித்த கடற்கரையில் படகை நிறுத்தி வைத்து விட்டு செவ்வாய்க்கிழமை காலை அங்கு கடலுக்குச் செல்வதற்காக படகை பார்த்தபோது இயந்திரம் திருட்டுப் போயுள்ளது தெரிய வந்ததாக உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தான் சமீபத்தில்தான் 30 குதிரை அதி வலுக்கொண்ட இந்த படகு இயந்திரத்தை கொள்வனவு செய்திருந்ததாகவும் அதன் பெறுமதி 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவெனவும் அவர் குறிப்பிட்டார்.
தனது படகுக்கு அருகில் ஏராளமான 15 குதிரைச் சக்தி கொண்ட இயந்திரப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால், தனது ஒரேயொரு படகு இயந்திரம் 30 குரைச் சக்தி கொண்டது என்பதால் அது திருடப்பட்டுள்ளதாகவும் தான் கருதுவதாக அவர் கூறினார்.
இச்சம்பவம்பற்றி காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago