2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொரியப் பெண்ணின் பணப்பையைத் திருடியவர் சிக்கினார்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 14 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி திங்கட்கிழமை (13) இரவு புறப்பட்ட தனியார் அதிசொகுசு பஸ்ஸில்;  கொரிய நாட்டுப் பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரைக்  கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

கொரிய நாட்டுப் பெண்கள் 3 பேர் மேற்படி பஸ்ஸில் பயணித்துள்ளனர். மேற்படி பஸ் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செங்கலடியைக் கடக்கும்போது தனது பணப்பை காணாமல் போயிருந்ததை அப்பெண்  தெரிந்துகொண்டார்.

இது தொடர்பில் பஸ் நடத்துநரிடம் கூறியதும்,  அருகிலுள்ள ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு பஸ் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொலிஸாரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, பணப்பையைத் திருடி தனது உள்ளாடையினுள் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனை அடுத்து, சந்தேக நபரைக் கைதுசெய்ததுடன், பணப்பையையும் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.  
அப்பணப்பையில் 17,220 ரூபாய் பணமும்; இன்னபிற முக்கியமான பொருட்களும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .