2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'கிழக்கு மாகாணத்தில் அரசியல் கலாசாரம் சீரழிந்துள்ளது'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் அரசியல் கலாசாரம் சீரழிந்து காணப்படுவதாக கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பாலமுனைப் பிரசேத்தில் புடைவை வடிவமைப்புச் சாயமிடல் மற்றும் சேவைகள் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (28) மாலை திறந்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'அரசியலிலும் சிறந்த அரசியல் கலாசாரம் இருக்க வேண்டும். ஆனால், கிழக்கு மாகாணத்தில் ஒரு வகையான அரசியல் கலாசாரம் நடக்கின்றது.

நாங்கள் செய்யாததைக் கூறுவதில் உடன்பாடு கிடையாது. புதிய வீடுகளைக்; கட்டியவர்களுக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள முதல்வர்கள் வந்து அவ்வீடுகளைத் திறந்துவைப்பார்கள் என்ற அச்சம் எனது பிரசேத்திலுள்ள மக்களுக்கு உள்ளது. இவ்வாறான நிலையிலேயே கிழக்கு மாகாணத்தின் அரசியல் கலாசாரம் இருக்கின்றது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X