Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில்; எழுக தமிழ் நிகழ்வை நடத்துவதற்குத் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரே இடத்தில் வெளிப்படுத்தும் வகையில் மேற்படி நிகழ்வை நடத்துவதற்கும் அது தொடர்பில் கிராம மட்டங்களில் சந்திப்புகளை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம், அதன் உப தலைவர் எஸ்.வசந்தராசா தலைமையில் மட்டக்களப்பு நகரிலுள்ள கூட்டுறவு நிலைய ஒன்றுகூடல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில்; பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
வடக்கிலிருந்து மாறுபட்ட பல்லினச் சமூகக் கட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில்; காணப்படுவதன் காரணமாக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் மக்கள் பேரவையுடன் தமிழரசுக்கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து கிழக்கு மாகாணத்தில் இதை வலுவானதாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும், இது தொடர்பான முயற்சியை தாம் மேற்கொண்டு வரும்போதும், அக்கட்சிகளின் உறுப்பினர்கள் யாரும் ஆதரவை வழங்குவதில்லை என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
தமிழ் மக்கள் பேரவையானது கட்சி சார்ந்த விடயங்களில் ஈடுபடாது என்பதுடன், அது சிவில் சமூகம் சார்ந்த செயற்பாடுகளை மட்டும் முன்னெடுக்கும. ஆகவே, இது தொடர்பில் அரசியல்வாதிகள் சிறந்த தெளிவைப் பெற வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago