Niroshini / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் தமது கடந்த கால போராட்டங்களின் நோக்கத்தை அடையாத வகையில் செல்ல வேண்டும் என்ற ஒரு திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மதுபான சாலைகளுக்கு அதிகமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(08) மாலை நடைபெற்ற திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 19ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்து சமய அபிவிருத்தி மன்றத் தலைவர் ந.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மதுபானசாலைகள் உள்ளன. அவற்றில் பல மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் பாடசாலை மற்றும் மத ஸ்தலங்களுக்கு அண்மித்தும் காணப்படுகின்றன.
அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,பிரதேசங்களிலுள்ள பொது அமைப்புக்கள் மது ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்பூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 85,000 சாராய போத்தல்கள் சராசரியக விற்பனை செய்யப்படுகிறன. இந்த நிலமை தொடருமானால் எமது மாவட்டத்தில் வறுமை மெலோங்கி நிற்பதை யாராலும் தடுக்கமுடியாது என்றார்.
மேலும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து மதத்தை ஓரங்கட்டிச் செல்வதற்கு பல தந்திரோபாயங்கள் நடைபெறுவதாக நான் அறிகிறேன். எனது சமயத்துக்கு அரசியல் தடையாகவிருப்பின் சமயத்துக்காக அரசியலை துறக்க தயாராகவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025