Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 14 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியிலுள்ள மீள்குடியேற்ற பிரதேசமான கேணிநகரில், நேற்று(13) கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தையொன்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியிலுள்ள கேணிநகர் கிராமத்தில் உள்ள வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டத்திலயே இக் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ,
நேற்றுக் காலை தோட்ட உரிமையாளர் தனது குடும்பத்துடன் தனது தோட்டத்துக்குச் சென்ற போது தனது தோட்டத்தில் உள்ள குடிசைக்கு முன்னால் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதைடுத்து பொலிஸார் குழந்தையை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago