Suganthini Ratnam / 2016 நவம்பர் 11 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 09 கோவில்களின் புனரமைப்புப் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பிரிவு, வியாழக்கிழமை தெரிவித்தது.
மாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாயை அவர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்தது.
பனிச்சங்கேணி முருகன் கோவில், கண்டலடி பத்திரகாளி அம்மன் கோவில்;, கண்ணகிபுரம் கிழக்கு ஸ்ரீசிவமுத்துமாரி அம்மன் கோவில், மீராவோடை ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், வட்டவான் ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், கொக்கட்டிச்சோலை நாகதம்பிரான் கோவில், நெல்லிக்காடு ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், பாலையடிவெட்டை புளியடிப் பிள்ளையார் கோவில், களுவாஞ்சிக்குடி மாங்காடு மாணிக்கப் பிள்ளையார் கோவில் ஆகிய கோவில்களுக்கே அவர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
புனரமைப்புக்காக கோரிக்கை விடுத்த கோவில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனமானோர் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு கூறியது.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025