Niroshini / 2015 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கடந்த காலத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையேயான கசப்புணர்வுகளை நீக்குவதற்கு உள்ள ஒரேயொரு வழி மொழி மட்டுமேயாகும்.அவற்றை கற்பதன் மூலம் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை பலப்படுத்த முடியும் என மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் யு.கே.திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் சிங்கள பொலிஸாருக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் செயற்பாட்டின் கீழ் 11ஆவது தொகுதி பொலிஸாருக்கான தமிழ் மொழி பயிற்சி ஆரம்ப நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு,கல்லடியில் உள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரியில் ஆரம்பமானது.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அவர்,
பொலிஸார் தமது கடமைகளை சரிவர மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இன்று இந்த நாட்டில் உள்ள பொலிஸாருக்கு மொழி அறிவு உடனடித் தேவையாகவுள்ளது.
மொழியறிவு இல்லாவிட்டால் அவர் சரியான பொலிஸ் அதிகாரியாக இருப்பதற்கு தகுதியற்றவராகவே கருதவேண்டும்.
தமிழ் மொழி மூலம் பயிற்சிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் அந்த மொழி மூலமே அந்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
பொலிஸாருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கும் இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .