Suganthini Ratnam / 2016 ஜனவரி 24 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
கடந்த காலத்தில் தமிழ் -முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள், அடுத்த சந்ததிக்கு காவப்படக் கூடாதென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
எனவே, அடுத்த சந்ததிக்கு சிறந்த வாழ்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் தமிழ் -முஸ்லிம் உறவை இந்த மண்ணில் வளர்க்க வேண்டுமென்ற அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைகோர்த்து ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை சனிக்கிழமை (23) திறந்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'புதிய அரசியலமைப்புத் தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் மக்களாகச் செயற்பட வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த வடுக்கள் மற்றும் துன்பியலை மறந்துவிட்டு, சரியானதொரு பாதைக்கு வரவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்' என்றார்.
'இனிவரும் காலங்களில் பல சவால்களை நாம் எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்நிலையில், தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் பெரும்பான்மையினர் ஒத்துக்கொள்ளக்கூடியதுமான ஓர் அரசியலமைப்புத் தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்தி இனப் பிரச்சினைத் தீர்வு விடயம் தொடர்பில் நாங்கள் செயற்படவுள்ளோம். அரசியல் யாப்புத் தொடர்பான அபிப்பிராயம் கேட்பதற்கு வரும்போது, உங்களுக்கான அரசியல் தீர்வு எது என்பதை எமது மக்கள் கூறக் கூடியவர்களாக இருக்க வேண்டும்'

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .