2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு

Niroshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை கல்லடி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பிரதான வீதியில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள்  கூட்டம் கூட்டமாக அழைந்து திரிகின்றது. இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றது.

மாலை நேரங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மற்றும் சைக்கிள்களில் பயணிப்போர் மாட்டுடன் மோதுண்டு விபத்துக்களும் இடம்பெறுகின்றன.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமாரிடம் வினவியபோது மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் வீதிகளில் திரியும் மாடுகளை பொலிஸாரின் உதவியுடன் பிடித்து அதற்கான தண்டப்பணத்தினை மாட்டு உரிமையாளர்களிடம் அறவிட்டுவருகின்றோம்.

சில இடங்களில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். நாவற்குடா போன்ற இடங்களில் மாடுகள் வீதிகளில் திரிவாக தகவல்கள் கிடைக்கின்றன. அதனையும் பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்படுதத நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

ஒரு மாட்டுக்கு ரூபாய் 5,000 வீதம் தண்டப்பணத்தினை அறிவிடுகின்றோம். தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் பொலிஸார் மாடுகளை பிடிப்பதற்கு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இது தொடர்பில் எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்தி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X