2025 மே 07, புதன்கிழமை

09 கட்டாக்காலி மாடுகள் பிடிபட்டன

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 10 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அலைந்துதிரிந்த 09 கட்டாக்காலி மாடுகளை கடந்த இரண்டு தினங்களாக காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் பிடித்துள்ளனர்.

கட்டாக்காலி மாடுகளினால் விபத்துகள் ஏற்படுவதாகவும் இந்த விபத்துகளை தடுக்கும் நோக்கில் காத்தான்குடி நகரசபை மற்றும்; மண்முனைப்பற்று பிரதேச சபை ஊழியர்களின்; உதவியுடன் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளை  அதன் உரிமையாளர்கள் 05 தினங்களுக்குள் தண்டம் செலுத்தி மீளப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், மாடொன்றுக்கு 5,000 ரூபாய் படி தண்டம் அறவிடுவதாகவும் பொலிஸார் கூறினர். அத்துடன், இந்த மாடுகள் இனிமேலும் வீதிகளில் அலைந்து திரிவதற்கு விடப்படமாட்டாதென உரிமையாளர்கள் உறுதியளிக்க வேண்டும்.  

இதன் பின்னரும் ஏற்கெனவே பிடிக்கப்பட்ட மாடுகள் வீதிகளில் அலைந்து திரிந்த நிலையில் பிடிபட்டால், அதன் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில வழக்குத் தொடரப்படுமெனவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X