Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
கடந்த காலத்தில்; கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட அரசாங்க நியமனங்களில் விகிதாசாரம் கணக்கில் எடுக்கப்படாது தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதுடன், நியமனத்தில் அநீதியும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமை இனியும் ஏற்படக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச கிளைக்குழு உறுப்பினர்கள் தெரிவு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சுப் பதவியையும் பல அமைச்சுகளையும் பெற்று அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தமிழர்கள் முழுமையாக வாக்களிக்கும் பட்சத்தில் முதலமைச்சைப் பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்ததாக இருக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்திருக்க வேண்டுமென்று சிலர் கூறுவது அவர்களின் அறியாமை. தமிழர்கள் பிரிந்து வாழக்கூடாது. எப்போதும் சேர்ந்து வாழவேண்டும.; அப்போது எமது உரிமையையும்; இருப்பையும் தக்கவைக்க முடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
இங்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் உரையாற்றுகையில், 'புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பில் அதற்கான முன்மொழிவை; எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்குடன் அரசாங்கம் உள்ளது' என்றார்.
'எப்போதுமே கட்சியின் தலைமையிலும் கட்சிக்கொள்கையிலும் நம்பிக்கை உடையவர்களாக நாம் இருக்க வேண்டும்.
தற்போது மிக முக்கியமான விடயமொன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ;உருவாக்குதல். அது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். பிரதமர் உரையாற்றியுள்ளார். அங்கு கூறப்பட்ட மூன்று முக்கிய விடயங்களில் தேசியப் பிரச்சினையைத்; தீர்த்துவைத்தல், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்தல், தேர்தல் முறையை மாற்றி அமைத்தல் தொடர்பாகவும் இந்தச்சபை அரசியல் நிர்ணயசபையாக மாறி இந்த விடயங்களை கையாளும் என்பது முன்மொழியப்பட்டு இருந்தும், இன்னுமே வாக்கெடுப்புக்கு விடாத நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றது
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக முன்மொழியப்பட்ட தீர்மானத்திலே அரசியலமைப்பிலே திருத்தத்தைக் கொண்டுவருவதா அல்லது புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதா என்ற கோள்வியினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் புதிய அரசியல் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று விடயங்களில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்ற விடயத்தை நீக்கிவிட்டு ஏனைய இரண்டு விடயங்களை முன்மொழிய இருப்பதற்கான ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
இது தொடர்பாக தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகம் என்ன என்று பார்க்கின்றபோது, அரசு சொன்ன விடயங்களில் உறுதியாக இருக்கவேண்டும் என்ற நிலை இருக்கிறது' என்றார்.
தலைவராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசாவும் செயலாளராக ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் சா.இராஜேந்திரனும்; பொருளாளராக க.குணசேகரமும் உபதலைவராக என்.புருசோத்மனும் உபசெயலாளராக ந.தேவமணியும் மற்றும் உறுப்பினர்களாக மா.கருணைரத்தினம் கே.கிருஷ்ணகுமார் கணபதிப்பிள்ளை எஸ்.சிவநடேசன் த.சண்முகராசா, ரஞ்சினி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago