2025 மே 07, புதன்கிழமை

'கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பது அனைவரினதும் கடமையாகும்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

எதிர்கால சந்ததியினர் இந்த நாட்டையும் வளத்தையும் சூழலையும் உயிர் வாழும் தன்மையையும் பாதுகாத்து வழங்கவேண்டிய பொறுப்பு இன்றைய சமூதாயத்துக்கு உள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

தேசிய கடல் சுத்திகரிப்பு தின நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை  ஆரம்பித்துவைக்கப்பட்டன. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு, கல்லடி கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இளம் தலைமுறையினரை இதில் இணைத்துக்கொண்டு கடற்கரையை எவ்வாறு பாதுகாப்பது, எவ்வாறு தூய்மையாக வைத்திருப்பது, இதனை பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு எமது வாழ்வியலை விருத்தி செய்வது என்பது தொடர்பான திட்டமிடல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் இணைந்துசெயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

கடல் வளத்தை பாதுகாத்து கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பது  அனைவரினதும் கடமையாகும். இலங்கை ஒரு தனித்துவமான  இறைமையும் தன்னாதிக்கமும் உள்ள நாடாகும். எமது நாட்டுக்கு எல்லைப் பிரச்சினை கிடையாது. கடலால் சூழப்பட்டுள்ள எமது இலங்கையின் கடற்கரைப் பிரதேசம் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை நாம் அனைவரும் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த கடற்கரை  சுத்தமாக வைத்திருப்பதுடன், இதன் வளத்தை பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எதிர்கால சந்ததியினர் இதில் கூடிய அக்கறை காட்ட வேண்டும். சமூகப் பொறுப்பாக இதனை கருத வேண்டும். அடுத்த ஆண்டு முதல் பொலித்தீன் பாவனை முற்றாக நிறுத்தப்படவுள்ள நிலையில் அதற்கு மாற்று திட்டத்தினை நாம் தேட வேண்டும்'; என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X