2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'கருணாவை கூட்டமைப்பு ஏற்றிருக்காது'

Niroshini   / 2015 நவம்பர் 05 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்             

தற்போது கருணா அம்மானை அரசாங்கமும் தூக்கி வீசிவிட்டது. இந்நிலையில் கருணா அம்மான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய முற்பட்டிருந்தால் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கருணா அம்மான் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைவதாக கூறி இருந்தால் நீங்கள் அதனை ஏற்றுக் கொள்வீர்களா? என இன்று வியாழக்கிழமை (05) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏதாவதொரு கட்சியில் இணைய வேண்டும். ஆனால் இங்குள்ள கட்சிகள் அனைத்துக்கும் கொள்கைகள் உள்ளன. அதாவது வடக்கு, கிழக்கு இணைந்த ஆட்சி, மற்றும் காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்க வேண்டும் போன்றவையாகும்.

ஆனால், முன்னர் விடுதலைப் போராட்டத்தின் போது இக்கொள்கையில் இருந்தவர். பின்னர் கொள்கையினை கைவிட்டுவிட்டார். பொலிஸ் அதிகாரம் தேவையில்லை காணி அதிகாரம் தேவை என்னும் கருத்தை அண்மைய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு முரண்பட்ட கொள்கைகளை உள்ளவரை இணைத்தால் கூட்டமைப்பினுடைய செல்வாக்கு அடிமட்டத்தோடு குறைந்து விடும். ஆகவே இவரை நான் மட்டுமல்ல யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .