Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்துக்கு இடமாற்றப்பட்ட பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவை மீண்டும் மட்டக்களப்பு, கரடியனாறு விவசாயப் பண்ணையுடன் இணைக்குமாறு மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன், இன்று புதன்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனிடம் கிழக்கு மாகாண விவசாயிகள் சார்பாக அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவிக்கையில்,'யுத்த காலத்துக்கு முன்னர் பிராந்திய விவசாய ஆராய்ச்சிப்பிரிவு, விதை உற்பத்திப்பண்ணை, விதை அத்தாட்சிப்படுத்தும் பிரிவு, மாவட்ட விவசாய சேவை நிலையம், விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையம் என்று 05 பிரிவுகளைக் கொண்டு இயங்கிவந்த கரடியனாறு விவசாயப் பண்ணையானது யுத்தம் காரணமாக முற்றாகச் செயலிழந்தது. இந்நிலையில், மேற்படி பண்ணையில் இயங்கிவந்த பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவை யுத்தத்தைக் காரணம் காட்டி படிப்படியாக அங்கிருந்து இடமாற்றி அரலகங்வில பிரதேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
தற்போது கரடியனாறு விவசாயப் பண்ணையை மீண்டும் இயங்கச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பண்ணையின் ஒரு பிரிவான விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையத்தை தொடங்குவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய 04 பிரிவுகளும் மத்திய அரசாங்கத்துக்குக் கீழே வௌ;வேறு இடங்களில் இயங்குகின்றன. இந்நிலையிலேயே, பிராந்திய விவசாய ஆராய்ச்சிப்பிரிவை மேற்படி பண்ணையுடன் மீளவும் இணைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இப்பண்ணையில் பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவு இயங்குமாக இருந்தால், அது இப்பிரதேச மண்வளம் மற்றும் காலநிலைக்கேற்ப விவசாய ஆராய்ச்சிகளைச் செய்து விவசாய அபிவிருத்திகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்' என்றார்.
36 minute ago
44 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
44 minute ago
6 hours ago
21 Dec 2025