2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'கல்வியில் முதன்மை வகித்த தமிழ்ச் சமூகம் தற்போது பின்நோக்கியுள்ளது'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

ஒரு காலத்தில் கல்வியில் முதன்மை வகித்த எமது தமிழ்ச் சமூகம் தற்போது ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது பெறுபேறுகளின் அடிப்படையில் சற்று பின்நோக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா கனி;ஷ்ட வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பெற்றோர் வெளிநாடு செல்வதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பல பெற்றோர்கள் வெளிநாடுகளில் இருப்பதினாலும், மாணவர்களில் பலர் பாடசாலைக்குச் செல்லாது இடைவிலகுகின்றனர். மாணவர்கள் பாடசாலைக்கு வராவிட்டால், ஆசிரியர்கள் அதற்கான காரணத்தை அறிந்து மாணவர்களின் வரவை அதிகரிக்க வேண்டும்' என்றார்.
 
'மேலும், கடந்த யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான எமது மக்கள் வறுமை காரணமாக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல்,  இளம் வயதில் தொழிலுக்கு அனுப்புகின்றனர். இதனால், அவர்களின் கல்வி இடைநடுவில் பாதிக்கப்படுகிறது. வறுமையைக் காரணம் காட்டி மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்தக்கூடாது' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X