Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. கல்வி வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் தற்போதைய தேசிய அரசாங்கம் செயற்பட்டுவருவதாக கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
பெரியநீலாவணை கிராம மக்கள் தேர்தலில் வாக்களித்தமைக்காகவும் வெற்றி பெற்றமைக்காகவும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரியநீலாவணை அமைப்பாளர் எம்.லோகராஜா தலைமையில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பெற்றோலிய வள பிரதி அமைச்சர் அனோமா கமகே, விஷ்ணு வித்தியாலய அதிபர் திருமதி.சிவமணி நற்குணசிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரியநீலாவணை கிராமம் சுனாமியினால் பாரிய பாதிப்புக்குள்ளான கிராமமாகும். இங்குள்ள மக்களின் பிரச்சினைகள், குறைபாடுகள், பௌதிக வளப்பற்றாக்குறைகள் போன்றவற்றை கடந்த ஆட்சியாளர்கள் செய்யத் தவறி விட்டனர். இதனால் இக்கிராம மக்கள் பல அசௌரியங்களுக்குள்ளாகினர்.
எனவே, இக்கிராமத்தின் குறைபாடுகளை எழுத்து மூலம் எனக்கு அறியத்தாருங்கள். தமிழ் பேசும் மக்களின் கல்வி முறையானது அல்லது கல்வி வளர்ச்சியானது பல பௌதிக வளப் பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றது.
இதனால் தமிழர்களின் கல்வி பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது. தமிழ் பிரதேசத்துக்கு பெருவாரியான நிதியை ஒதுக்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எனவே பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்தவற்கும் விசேடமாக தமிழ் பிரதேசங்களை முன்னேற்றுவதற்கும் தீர்மானித்துள்ளோம். அது போலவே இப்பிரதேசத்தில் தொழில் வாய்ப்புக்களையும், சுய தொழில்களையும் உருவாக்கவும் அதனை சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.
இக்கிராமத்தில் நெசவு கைத்தொழில் மூலம் 1000 பேருக்கு தொழில் வழங்கக்கூடிய வாய்ப்பு என்னிடம் இருக்கின்றது. இது சம்பந்தமாக சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் அதுபற்றிய விபரங்களையும் இடவசதிகளையும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டுள்ளேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago