Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டுக்காக அடுத்த ஆண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் பைஷால் காசிம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, திருமலை வீதியில் உள்ள எஸ்.பி.மெடிலொனி ஆய்வுகூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்.பி.மெடிலொனி ஆய்வுகூடத்தின் பணிப்பாளர் எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று இலங்கையில் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலும் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்துவருகின்றது.
இந்த புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.
அதிகளவில் புற்றுநோய் தாக்கத்துக்கு பெண்கள் உட்படுகின்றனர்.அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை வெளியில் கூறுவதற்கு தயங்குவதன் காரணமாக உயிரிழக்கும் நிலை ஏற்படுகின்றது.
அந்த நிலையை அவர்கள் மாற்ற வேண்டும்.இன்று மட்டக்களப்பில் புற்றுநோய் வைத்தியசாலை திறக்கப்பட்டுள்ளது.அதேபோன்று இவ்வாறான ஆய்வுகூடங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இன்று புற்றுநோயை கண்டறிவதற்கான பல்வேறு இடங்கள் உள்ளன.அவற்றின் மூலம் அவற்றினை கண்டறிந்து ஆரம்பத்தில் அவற்றினை குணப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுப்பது நல்லது.
சுகாதார அமைச்சு மூலம் புற்று நோய் தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எதிர்காலத்திலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.


3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025