2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'சிறுகைத் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்'

Niroshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பெண்கள் சிறுகைத் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் தமது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற வாழ்வின் எழுச்சி பயனாளிகளுக்கான தொழில் முயற்சி அறிவினை விருத்தி செய்யும் பயிற்சி செயலமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மானியமாக கிடைக்கும் தொழில் உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரத்துக்கான உதவிகளை மற்றவர்களுக்கு சிலர் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு செய்யக் கூடாது. பயனாளிகளுக்கு தரப்படும் உதவிகளைக் கொண்டு தொழில் முயற்சியினை மேற்கொண்டு வாழ்வாதாரத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

உற்பத்தி தரப்படுத்தல் இருக்க வேண்டும். அதில் சுத்தம் மற்றும் சுற்றுப்புறச் சூழலின் சுத்தம் மற்றும் கைகளுக்கு கை உறை அணிதல் போன்றவை கவனிக்கப்படல் வேண்டும்.

இன்று நவீன உபகரணங்கள் தொழில் முற்சிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை பெற்று இலகுவாக தொழில் முயற்சியினை மேற்கொண்டு அதிகமான நன்மைகளை பெறமுடியும் என்றார்.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலகப்பிவு தலைமையக முகாமையாளர் ஜனாபா பாத்தும்மா பரீட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X