Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 14 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ.ஹுஸைன் கே.எல்.ரி.யுதாஜித்
சிறுபான்மையினச் சமூகங்களாகிய தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன்; செயற்பட்டு உரிமைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக சூழ்ச்சியான முறையில் பல நிகழ்ச்சிநிரல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் படுவான்கரைப் பிரதேச மக்களுடனான சந்திப்பு திங்கள் (13) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'தமிழ் மக்களின் பலமான ஜனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. அச்சக்தியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவீனப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பேரினவாதச் சமூகத்தின் மத்தியில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் ஐக்கியப்படுவதற்கு பல தடைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ முன்னெடுக்கப்படுகின்றன' என்றார்.
'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, மலையகத் தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் போன்றவற்றை பலவீனப்படுத்துவதிலோ, உடைப்பதிலோ வெற்றி கண்ட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதில் வெற்றி காண முடியவில்லை.
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் முடியாமல் போன காரியத்தை எப்படியாவது செய்துவிட வேண்டும் என்ற நிலையில் தற்போது மறைமுகமான சக்திகள் செய்ய முற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
எனவே, எம்மிடையே உள்ள வலுவான ஒற்றுமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மக்களுக்கும் வெற்றியைப் பெற்றுத் தரும். எனவே ஒற்றுமைக்கும் வெற்றிக்குமாக ஒன்றுபட்டு உழைப்போம். எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்படுவோம்' என்றார்.
53 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago