Suganthini Ratnam / 2016 நவம்பர் 22 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்பேரின்பராஜா சபேஷ்
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் தீர்வில் பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் சகல சலுகைகளும் இந்துமதம் உட்பட ஏனைய மதங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்தின் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு வழங்கப்படும் தனி உரிமை இல்லாமல், சகல மதங்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும். இதனை நல்லாட்சி அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் கூறினார்.
செங்கலடிப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி மட்டக்களப்பு இந்துக் குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'மட்டக்களப்பு மாவட்டத்தில் தேரர்; ஒருவரின் நடவடிக்கை காரணமாக இந்த நாட்டின் சரித்திரத்தில் இந்துமத குருக்கள் தங்களுடைய பிரச்சினைகளைக் கூறுவதற்கு வீதிக்கும் வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான போராட்டங்களில் இந்துமத குருக்களோ, கிறிஸ்தவ மதகுருக்களோ நேரடியாகக் கலந்துகொண்டதில்லை. அவர்கள் தங்களுடைய மதபோதனையின்போது, தனி மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், குடும்பம் எவ்வாறு வாழ வேண்டும், ஒரு நாட்டின் அரசியல் எவ்வாறிருக்க வேண்டும் என்றே போதனை செய்வர். அவர்கள் அரசியலுக்கு வருவதில்லை.
ஆனால், தற்போது தங்களின் பிரச்சினைகளை போராட்டங்கள் மூலம் தெரிவிக்குமளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்; என்பது கவலைக்குரிய விடயமாகும்' என்றார்.
'இந்த நாட்டிலே சட்டம் சீர்குலைந்திருக்கிறது. அது நல்லாட்சியிலும் நீடிக்கிறது என்பது கவலையான விடயம். இதனை இன்னமும் தொடரவிடாது, சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைப்போர் யாராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். நாட்டில் சமாதானத்தையே இந்துமத குருமார்கள் விரும்புகின்றனர்' எனவும் அவர் கூறினார்.
-
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025